வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் பல தலைமுறை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இணைந்தது இருமனம்... நடக்கிறது திருமணம் ... ஆனந்தத்தில்மகிழ்வது எங்கள் பூமனம்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.!
மேகமென்னும் கூந்தலினை
மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால்
மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம்
வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே..
அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள்.
கெட்டி மேளம் கொட்டிட தான்.
விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கண்களாலே காதல் பேசி
வார்த்தையாலே வர்ணம் பூசி
பாசம் என்னும் கவிதையெழுதி......
நேசத்தோடு வாழனும் நண்பா .....
வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே வானம்
வாழும் வரை வாழ்கவே
எங்கள் நெஞ்சில் வாழும் நண்பா
வானம் போல வாழனும் நண்பா
நீயும்... (மணமகளும் மணமகனும்) கூட சேர
இன்பம் வந்து உங்களை சூழ...
வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ அவள் வசம்..
அவள் உன் வசம்..
இனி இது தானே உன் பரவசம்..
24 மணி நேர free talk சிம் கார்டு கேக்க போற..
இனி கூஜாவும் தான் தூக்க போற..
google-களின் தேடல்களுக்கு ஒரு full stoppu..
இனி no chance of pickup,drop,escappu..
இனி அழுக்கு சட்டை,socks -க்கு away
அப்படா எங்களுக்கும் கிடைச்சுது ஒரு escape way..
மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்
உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்
ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.
ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.
ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும்
ஆனந்த்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அகர வரிசையில், குறள் வடிவில் எழுதிய வாழ்த்து மடல்......!
அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.
இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்
உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்
எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்
ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.
ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.
ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும் வணங்கும்
வாழ்த்தும் உங்கள்
ஆனந்த்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவியும் சுவையும் போல் வாழி!
காவியத் தமிழ்த் தேன் போல் வாழி!
புவியும் நிலவும் போல் வாழி
புது மணத்துணைவர் நீர் வாழி!
கவ்விய கைகள் நெகிழாமல்
காதலால் என்றும் பிரியாமல்
செவ்விய விதத்தில் சுவை படவே
சீர்மிகு வாழ்க்கை நீர் வாழீர்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....
பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....
சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....
பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரு மனமொத்து திருமணமாகி !!
திருமணத்திற்கு பின்பும் இரு மனமொத்து ,,,,
இன்பக் கடலில் மூழ்கி முத்தெடுத்து !
முத்தை முத்தமிட்டு , சீருடன் சீராட்டி ,,
வையம் வாழ்த்த, இன்பங்களனைத்தும் ஒருசேரப் பெற்று ,
வாழ்ந்திடுவீர் என ,
அன்புடனே இதய பண்புடனே !!!!!
வாழ்த்து கின்றேன் நானே !!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு
கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்
நலிவடையா விளை நிலம் போலானார்!
கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகராசன் நல்ல மனசுக்கு அந்த
மகாலக்ஷ்மியே வர வேணும்
மங்கலமாய் மூன்று பெற்று
மனதொத்து வாழ வேணும்...
இத்தனை பெரிய மனசுக்கு
இறங்கி வருவா வீடு தேடி
அத்தனையும் தந்திடுவாள்
அருமையாக வாழ்ந்திடுவாள்...
புருஷனைத் தாலாட்ட
பெண்ணொருத்தி வருவா அவ
கதகதப்புல தூங்கித் தூங்கி இவன்
கண் கெறங்கி ரசிப்பான்...
நாத்தனார் பிடில் வாசிக்க
மைத்துனர் மிருதங்கத்தைத் தட்ட
மாமனார் கடத்தை உருட்ட
மாமியார் தம்புரா மீட்ட
எல்லாருக்கும் தோதா பாடி
கச்சேரி தான் தினமும் அங்கே-
இசையாய் இசைந்து வீடே
இனிமையாய்ப் பூ பூக்கும்...
இப்படி நல்லா இருக்கணும்னு
நாலு பேர் வாழ்த்தையிலே
நானும் தான் வாழ்த்திடுவேன்
நல்ல ஒரு தோழியாக...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனைத்து வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்
அன்பே மூலம் அவையத்து வாழ்வார்க்கு அறம்
பண்பே பலம் அவையத்தார் அறத்துக் குரம்!
இன்பமெல்லாம் இணைந்தார்க்குத் தரும்
இல்லறமே இணையிலாதோர் வரம்.
ஈர் இதயம் ஈர்ந்துதயம் காதல் சேர்
உயிரும் சேர்ந்துரு குவோர் இல்வாழ்வதனில்
வேர்விடும் நாளிது
திருமணம் எனும் ஓரு தினமாம்
பெறுகவே அருள்!
கடலலை கரையினிற் கொண்டிடும் உரிமை
கண்டிடும் இயற்கையின் அழகுதன் அருமை
இலையோ டுரசுந் தென்றலின் மென்மை
மண்வான் உறவிலூறும் மேன்மை
வெண்பனி போலுளந் தூய்மை
எண்ணத்தி னிடை வாய்மை
தாழ்ந்திடிலு மொருமை
வேண்டிடும் பெருமை
யாவும் அடைவீர் நீவீர் என்றும் நலமுடனே வாழ்க!
இல்வாழ்வான் இதழ் மொழியில் மனையாள்
அவளிரு விழியில் ஒளியாய்த் துணைவன்
ஆனோர் ஏற்றிடும் நல்குடும்பத் தீபமது
ஈனோர் போற்றிட மங்காது சுடர்க
தேடுவது நன்று புகழும் நித்தம்
தேடுவீர் செல்வம் மொத்தம்
கூடிடும் வாழ்வின் அர்த்தம்
பாடிடு மழலைச் சத்தம்
இன்பங்களிதுவே இவையெல்லாம் வேறொன்று மிலவே
உயிரோடு உளமும் உம்முறவினால் ஒன்றாம்
அவரவர் உணர்வினை மதிப்பது நன்றாம்
ஆத்திரமவசரம் அறிவிலார் கொள்கை
சாத்திரம் சொல்லும் சரிவழி செல்க
அறிவிலாக் கனவுகள் சேரும்
ஆகாய முகில்களைப் போலே
ஆசைகள் அறுபது கோடி
அதில் தேவைப் படுவது பாதி
அதையறிந்திடல் நீவீர் நீதி
அறிந்தே நீரும் வாழி நீடு
வாழிய வாழிய மணமக்கள்
I am still working on some additions to the above list... Any suggestions / ideas is very much appreciated....